தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் சமூக ஊடகங்களில் பெண்கள் போல் வேடமணிந்து, போலி முகநுால் கணக்குகள் ஊடாக மோசடியான செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை குவைத் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குவைத் ஹவாலி பகுதியில் விபச்சார வியாபாரம் செய்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக குவைத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் வெளிநாட்டவர்களால் அங்கு விபச்சார செயற்பாடுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.