சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபியாவிலிருந்து சென்னை வந்த சவுதி எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சவுதி அரேபியாவில் வைத்தியராக பணிபுரியும் சென்னை, தஞ்சாவூரைச் சேர்ந்த 45 வயதுடைய சிறிராம் என்ற வைத்தியர் ஒருவர் சவுதி அரேபியாவிலிருந்து சென்னை வந்த சவுதி எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 35 வயது நிரம்பிய தமிழக பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை குறித்த பெண் விமான பணிப்பெண்கள் மற்றும் அதிகாரிகளிடமும், சென்னை விமான நிலையப் பொலிஸ் அதிகாரிகளிடமும் முறையிட்டமையினை அடுத்து அந்த வைத்தியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.