சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் குடியிருப்பு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குவைத் குடியிருப்பு சட்டத்தை மீறிய 34 பேர் அதிரயாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள், போலி பணிப்பெண்கள் அலுவலகம் நடாத்தியவர்கள், பிச்சையெடுத்தவர்கள் என பலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.