கடந்த 9ஆம் திகதி இலங்கை வந்தடைந்த உரக் கப்பலில் உரம் இறக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 10 நாட்களுக்குள் விநியோகம் நிறைவடையும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த உரப் பொதியின் தரம் தொடர்பில் நேற்று (11) விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது சரியான தரம் என உறுதி செய்யப்பட்டு, வர்த்தக சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விவசாயிகளுக்கு
50 கிலோ யூரியா மூட்டை ரூ.10,000 க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. என தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.