தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபிய இரண்டு புனித (மக்கா-மதீனா) பள்ளிவாசல்களில் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மானின் விருந்தினராக நியூசிலாந்தில் இருந்து 60 யாத்ரீகர்கள் குழு இந்த ஆண்டு ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.
நியூசிலாந்திலிருந்து வருகை தந்துள்ள இந்த யாத்ரீகர்களில் 2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த கொடூரமான பயங்கரவாத துப்பாக்கி தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆவார்கள்.
இவர்கள் அனைவரும் மன்னர் சல்மானின் விருந்தினராக இம் முறை ஹஜ் கடமைக்காக அழைக்கப்பட்டு உபசரிக்கப்பட்டு ஹஜ் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.
இதே போன்று தாக்குதல் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிலும் நியூசிலாந்திலிருந்து புனித ஹஜ் கடமைக்காக தாக்குதல் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என 200 பேர் வரை மன்னர் சல்மானின் விருந்தினர்களாக ஹஜ் கடமைக்காக அழைக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.