ஜனாதிபதித் தேர்தலுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு, பல SJB, TNA மற்றும் SLFP பாராளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்த போதிலும் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளோம்” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியூஸ் வயர்க்கு தெரிவித்தார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றதன் பின்னர் சர்வகட்சி ஆட்சியை அமைப்பார் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.