சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் சமூக வலைதளங்களில் ஊடாக பாலியல் செயல்கள் மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் ஆன்லைன் நெட்வொர்க்கை நடாத்தி வந்த 9 வெளிநாட்டினரை (5 பெண்கள் & 4 ஆண்கள்) குவைத் உள்துறை அமைச்சகம் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மடிக்கணிணிகள், ஸ்மாட்போன்கள் என பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தகுதியான அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களின் பயோமெட்ரிக் தரவு பதிவு செய்யப்பட்டு அவர்களை குவைத்தில் இருந்து நாடு கடத்தும் வேலைகள் இடம் பெற்று வருவதாகவும் இனிமேல் அவர்களால் மீண்டும் நாட்டிற்குள் நுழைய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.