பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தில் வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது.
குறித்த பெண் கடவுச்சீட்டு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாகவும், ஆனால் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்தினர் உடனடியாக அந்த பெண்ணுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.