மேலும் ஒருவர் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளார்.
பயாகலையில் உள்ள லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (எல்ஐஓசி) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 60 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பயாகல நகரில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த குறித்த நபர் திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மொரட்டுவையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.