"பசித்தோருக்கு உணவளிக்க கைகோர்ப்போம்" எனும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக சம்மாந்துறை பிரதேச செயலக ஊழியர்களின் பங்களிப்புடன் எதிர் வரும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு தொகை சமைத்த உணவுப் பொதிகளை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது .அதற்கமைவாக முதற்கட்டமாக ஒரு தொகை சமைத்த உணவுப் பொதிகளை கையளிக்கும் நிகழ்வு மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் S.L.முகம்மது ஹனிபா அவர்களின் தலைமையில் இன்று( 06) சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி பாடசாலைக்கு முன்னாள் அமைக்கப்பட்ட செயலணி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் U.M. அஸ்லம், கணக்காளர் I.M பாரிஸ், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி A.L.M.அஸ்லம், , நிருவாக உத்தியோகத்தர் K.B.சலீம்,கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் ML.தாசிம், பிரதேச செயலக ஊழியர் நலன்புரி அமைப்பின் செயலாளர் M.S.A.அன்வர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.