தகவல் - சம்மாந்துறை அன்சார்.
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ளமையை அடுத்து மறு அறிவித்தவல் வரும் வரை இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக பிளைடுபாய் (flydubai) தெரிவித்துள்ளது.
துபாய் மற்றும் கொழும்பு இடையிலான flydubai விமானங்கள் ஜூலை 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இலங்கையின் நிலவரத்தினை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரிய எரிபொருள் பற்றாக்குறையை நிலவிவருகிறது, இதனால் விமான நிறுவனங்கள் மீண்டும் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மற்ற மையங்களில் எரிபொருள் நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிளைடுபாய் (flydubai) விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் தங்களது பணத்தை திரும்பப் பெறுவார்கள் என்றும் பயண அட்டவணையில் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றும் flydubai செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.