தகவல் - சம்மாந்துறை அன்சார்.
மக்காவில் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கும் வழிபாட்டாளர்களுக்கு இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனை விநியோகம் செய்வதற்காக இம் முறை புனித மக்கா பள்ளிவாசலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிநவீன ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ரோபோக்கள் புனித மக்கா பள்ளிவாசலில் கூட்டத்தை எளிதாகக் கண்டுபிடித்து அவர்களுக்கு அல்-குர்ஆனை தானாக விநியோகிக்கும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ 59 கிலோ எடை கொண்டதும் 1.2 - 5 மீ/வினாடி மற்றும் பத்து கிலோ திறன் கொண்ட கட்டுப்படுத்தக்கூடிய வேகம் கொண்டதுமாகும்.