Ads Area

லெஜன்ஸ் விளையாட்டு கழகத்தின் ப்ளு நேவிஸ் சவால் கிண்ணம் ஆரம்பம்.

 (எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் தனது 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு T20 கிரிக்கெட் ப்ளு நேவிஸ் சவால் கிண்ணம் சுற்றுப் போட்டி கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் ஆரம்பமானது குறித்த சுற்று தொடர் கிரிக்கெட் போட்டியில் இருபத்திநான்கு கழகங்கள் பங்கு பற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரின் முதல் போட்டி நிந்தவூர் முத்தகீன் மற்றும் மருதமுனை கோஸ்டல் வோரியஸ் அணிகளுக்கு கிடையில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோஸ்டல் வோரியஸ் அணியினர் தனக்கு வழங்கப்பட்ட 20 ஓவர்களில் 126 ஓட்டங்களை பெற்றனர்.பதிலளித்தாடிய முத்தகீன்  அணியினர் 18 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை ஹீனா ஜூவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஸி.எம். ஸஹீம் அவர்களும் அதிதிகளாக லெஜன்ஸ் விளையாட்டு கழக தலைவர் எம் எம் ஜமால் டீன், பிரதி தலைவர் கரீம் மற்றும் தவிசாளர் இனாம் மௌலானா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பிரதம அதிதியின் கரத்தினால் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe