Ads Area

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி நியமனம் !

 நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இருதய விசேட வைத்திய நிபுணராக டாக்டர் எம். ஏ. நெளஸாத் அலி முதல்முறையாக சுகாதார அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா தெரிவித்தார்.

தென்கிழக்கு பிராந்திய மக்களிடையே அதிகளவாக காணப்படும் தொற்றா நோய்களுள் இருதய நோய், மாரடைப்பு மற்றும் உயர் குருதியமுக்கம் காணப்படுகின்றன. இதனால் திடீர் மாரடைப்புகளால் இளவயது மரணங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கான முறையான சிகிச்சைகளை உடனடியாகவும் உயர்தரத்திலும் வழங்க இருதய விசேட வைத்திய நிபுணர் நெளஸாத் அலி  இந்த புதிய நியமனம் கிழக்குப் பிராந்திய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இருதய நோய்க்கான சிகிச்சையை விசேட வைத்திய நிபுணரால் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளலாம் என அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏனைய சுகாதார நிறுவனத் தலைவர்கள், விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe