இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இடையில் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உரையாடல் தொடர்பான ஆவணத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் பகிர்ந்த ஆவணத்தின்படி, 2007 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான பொருளாதார உதவியை நிறுத்துமாறு ஜப்பானிடம் கோரியிருந்தார். என விக்கிலீக்ஸ் ஆவணம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் அவர்களின் இக் கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இலங்கை மக்கள் "தங்கள் தலைவர்களின் கமிஷன் மற்றும் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்காக" தண்டிக்கப்படக்கூடாது என்று பதிலளித்ததாக அந்த ஆவணவத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழு விக்கிலீக்ஸ் ஆவணம்: https://twitter.com/wikileaks
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.