Ads Area

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி வரும் முக்கிய பிரமுகர் ஜெயசூர்யா.

அரசியலில் பிரவேசித்தமைதான் தான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவு என்றும், தான் அரசியல் களத்தில் பிரவேசித்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போத அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"என் வாழ்க்கையில் நான் எடுத்த மிகவும் முட்டாள்தனமான முடிவாக இதனை நான் கருதுகிறேன். அத்தகைய முடிவுக்காக நான் வருத்தப்படுகிறேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். என்னைப் போன்றவர்களுக்கு இது பொருந்தாது,'' என்றார்.

அரசியலில் இருந்து எதையும் பெறுவதை விட, 2011 உலகக் கோப்பையை தவறவிட்டது போன்ற வாய்ப்புகளை மட்டுமே இழந்தேன்.

சனத் ஜயசூரிய 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் மாத்தறையில் இருந்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு வந்ததன் மூலம் அரசியலில் இருந்து விலகினார்.

இலங்கை நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி வரும் முக்கிய பிரமுகர்களில் ஒருவர் ஜெயசூர்யாவாகும். மக்கள் படும் இன்னல்கள் குறித்து அரசு தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe