Ads Area

மகிந்தா ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சஅளவுக்கு ரணில் விக்ரசிங்கே புகழ்பெற்றவர் அல்ல.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் திரும்பலாம்.  இலங்கையில் கொந்தளிப்பான சூழல் மேலும் தொடரலாம் என்று காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் திரும்பலாம்.  இலங்கையில் கொந்தளிப்பான சூழல் மேலும் தொடரலாம் என்று காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதாரச் சீரழிவும், அமைதியற்ற சூழலும் நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குப்பின், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் பதவிவிலகினர். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெரிய கடன் சுமையில் தத்தளிப்பதால், சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றுடன் பேசி பொருளாதாரத்தை மீட்டு மேலே கொண்டுவருவது அதிபர் ரணிலுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

ஆனால், இலங்கையில் பொருளாதாரச் சீரழிவுக்குப்பின் மக்கள் போராட்டம் நடந்தபோது, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை மக்கள் பதவிவிலகக் கூறினர். இதைத்தொடர்ந்து அவரும் பதவி விலகி  ஒதுங்கியிருந்தார். 

ஆனால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகியபின் இடைக்கால அதிபராக ரணில் தேர்வு செய்யப்பட்டார். இப்போது மீண்டும் அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை எம்.பி.க்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பங்கள், பொருளாதாரச் சீரழிவு குறித்து காங்கிரஸ் கட்சியி்ன் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் “ மகிந்தா ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சஅளவுக்கு ரணில் விக்ரசிங்கே புகழ்பெற்றவர் அல்ல. இலங்கையில் நடந்து வரும் மக்கள் போராட்டங்கள் ரணில்ககு எதிராகக்கூட திரும்பியது. இலங்கை அதிபராக ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை நினைத்து நான் அஞ்சுகிறேன்.

இவரின் தேர்வால்,  போராட்டமும் முடிந்திவிடாது, அமைதியும், ஒற்றுமையும் திரும்பவராது.

இலங்கையில் கொந்தளிப்பான சூழல் அதிகரிக்கும், பொருளதாரச் சூழல் மேலும் மோசமாகலாம் என்பது எனக்கு வேதனையாக இருக்கிறது இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம் - https://tamil.asianetnews.com




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe