Ads Area

இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு..

 


இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 16858ல் குறைவடைந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் 301707 பிறப்புக்கள் பதிவாகியிருந்ததுடன் 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 284848 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, 2021ம் ஆண்டில் பிறப்பு வீதம் 12.9 வீதமாக குறைவடைந்துள்ளது. பெண் பிள்ளைகளை விடவும் ஆண் பிள்ளைகள் அதிகளவில் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021ம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இவ்வாறு குழந்தை பிறப்புக்கள் குறைவடைந்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe