2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

2022 செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படும்

அரசு மற்றும் அரச பங்களிப்போடு இயங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஓய்வூதிய வயது 60 ஆக குறைக்கப்படும்

கருவூலத்தின் கீழ் ஒரு சுயாதீனமான தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுகள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை அருகில் உள்ள மாநகரசபை அல்லது நகரசபையுடன் இணைப்பதற்கான முன்மொழிவுகள்.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் மொத்த பங்குகளில் 20% த்தை வைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவுகள்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இடைக்கால கொடுப்பனவாக 2,500 ரூபாய் வழங்குவதற்கான யோசனைகள்.

61,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு மாதம் ரூ.10,000 மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுகள்.

அரசு வங்கிகளுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ.680 மில்லியன் (வட்டி நீங்கலாக) தள்ளுபடி செய்தல்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையை குருநாகலில் நிறுவுவதற்கான முன்மொழிவுகள்.

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுகள்,

புகையிரத போக்குவரத்து சேவைகளை அபிவிருத்தி செய்வதற்கும், களனிவெளி புகையிரத பாதையை சிறந்த திட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும் தனியார் துறை முதலீடுகளை பயன்படுத்துவதற்கான பிரேரணைகள்.

எதிர்காலத்தில் அரசாங்கத் தேவைகளுக்காக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கும் எதிர்காலத்தில் நிலக்கரி எரிபொருளில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும் முன்மொழிவுகள்.

நாட்டின் வளங்களில் இருந்து வரி அல்லாத வருவாயை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள்.

கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் போன்ற முன்னுரிமைத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவுகள்

பொருளாதார நெருக்கடியால் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் பயன்பெறும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

பால் உற்பத்தியை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்

இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரச காணிகள் வழங்கப்பட்டு, அத்தகைய நிலங்களைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் திட்டங்கள் மேற்கொள்ள ரூ. 50 மில்லியன் ஒதுக்கப்படும்.

உள்ளூர் விவசாயப் பொருட்களை பொதி செய்யும் தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகை