(ஏ.எம்.இன்சாப்)
கடந்த க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு நேற்றைய தினம் (28.08.2022) வெளியாகியது. இதனடிப்படையில் சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் கலைப்பிரிவில் கல்வி கற்ற 07 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு மாணவி 3A சித்தியின் மூலம் மாவட்ட ரீதியில் 18ஆம் நிலையினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். மற்றும்
ஏனைய மாணவர்கள் மூன்று பாடச் சித்திகளைப் பெற்றுள்ளனர். இம் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (29.08.2022) பாடசாலையில் பாடசாலை அதிபர் எம்.அப்துல் ரஹீம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட அவர்களது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது பிரதம அதிதியாக
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர்,
பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) ஏ.எல்.எம். மஜீட், சம்மாந்துறை கோட்டக் கல்வி அதிகாரி எம்.ஏ. சபூர் தம்பி மற்றும் பிரதி அதிபர் (நிருவாகம்) எம். அபூபக்கர், பிரதி அதிபர் (கல்வி அபிவிருத்தி) எம்.ஏ.எம். சிராஜ்,
பகுதித் தலைவர் எம்.எல். எச். பசீர், பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் மற்றும் ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.