Ads Area

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு- பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவலை.

 


சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தம் 25% மாத்திரமே சந்தைக்கு வெளியிடப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா தற்காலிகமாக ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதையடுத்து அங்கிருந்து இலங்கைக்கு கோதுமை மா கொண்டு வரும் வர்த்தகர்கள் மாவின் விலையை 350 ரூபாவாக உயர்த்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்நிலை தொடர்ந்தால் பாண் ஒன்றை 250 முதல் 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரித்துள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe