குர்ஆன் மத்ரிசாக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளினை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் ஓர் அங்கமாக குர்ஆன் மத்ரஸாக்களுக்கு எழுது பலகை (White Board) வழங்கும் நிகழ்வு மஸ்ஜிதில் ஜாரியா பள்ளிவாசலில் அதன் தலைவர் றைஸ்தீன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் OCD அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான, விஞ்ஞான முதுமாணியுமானி அஸ்மி யாஸீனின் அவர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட குர்ஆன் மத்ரிஸாக்களுக்கான எழுது பலகைகள் (White Board) வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜாரியா பள்ளிவாசலினுடைய பிரதி தலைவர் ILM சலீம் ஆசிரியர், OCD அமைப்பின் ஆலோசகர் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் முகாமையாளர் MM.மன்சூர் மற்றும் நூர் பள்ளிவாசல் தலைவர் அஷ்ஷெய்க் ALM.றிப்கான் மற்றும் முன்னால் கிராம சேவகர் சம்சுதீன், பள்ளிவாசல் நிர்வாகிகள், குர்ஆன் மத்ரிசாக்களின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.