Ads Area

முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்ற வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

 


நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளருக்கு 5 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே குறித்த கடைக்காரர் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமான விலையில் முட்டை விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த கடை உரிமையாளர் பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

குறித்த கடையிலிருந்து 4 முட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், கடைக்காரர் நான்கு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் 260 ரூபா அறவிட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe