கொழும்பு பெதகான விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி தெரிவு போட்டியில் சம்மாந்துறையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்றிய போதிலும் ஐ.ரீ.இஸ்ஹான் அஹமட் மத்திரம் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் 09.08.2022ஆம் திகதிய 54ஆவது கூட்டத் தொடரில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்படும் வீரர்களுக்கு தேவையான பாதணி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்குரிய பிரேரனையினை கௌரவ உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் பிரேரித்ததற்கமைய, ஏனைய கௌரவ உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு பயிற்சியளித்த றோயல் லைன்ஸ் அகடமி, பயிற்றுவிப்பாளர்கள் இவரின் பெற்றேரர்களுக்கும், வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், சகோதார் ஐ.ரீ.இஸ்ஹான் அஹம்மட் தேசிய, சர்வதேச மட்டத்தில் மேலும் பல சாதனைகளை புரிந்து மண்ணுக்கு பெருமையை சேர்க்க வாழ்த்தி வரவேற்பதில் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.
இவருடன் சென்ற சக வீரர் எம்.என்.எம்.எச்.ஹஸ்னிப் தேசிய அணிக்கான வாய்ப்பு கிடைக்கபெறமால் போயுள்ளது இருந்த போதிலும் அவரின் முயற்ச்சியை பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் வாயப்பு கிடைக்க பிரத்திக்கின்றேன்.
ஏ.எம்.முஹம்மட் நௌஷாட்
கௌரவ தவிசாளர்
சம்மாந்துறை பிரதேச சபை
2022.08.10