Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் சக வாழ்வு கருத்தரங்கும் காட்சிப்பலகை திறந்து வைப்பும்!

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் 

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூகம் மற்றும் தேசிய சமாதானபேரவையுடன் இணைந்து Helvetas Srilanka,  European Union  அனுசரனையுடன் காட்சிப் பலகை திறந்துவைக்கும் நிகழ்வு தேசிய சமாதான பேரவையின் PVE வளவாளர் முஹம்மத் தன்ஸீப் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

இன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா,கணக்காளர் ஐ.எல் பாரீஸ்,சமுர்த்தி வங்கி தலைமைபீட  முகாமையாளர் யு.எல் சலீம்,நிர்வாக உத்தியோகத்தகர் கே.பி சலீம்,கிராம நிலதாரி நிர்வாக உத்தியோகத்தகர் ஐ.எல் தாஸீம், அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக இணைப்பாளர் ஐ.எல் ஹாஸிம்,அட்டாளைச்சேனை அபிவிருத்தி சமூக உறுப்பினர்கள் பொதுமக்கள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் தீவிரவாத வன்முறையை தடுப்பதற்கு சமூக மட்ட அணுகு முறையை செயல் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது .



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe