சம்மாந்துறை அன்சார்.
அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்த அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் அறிவிப்பை சவுதி அரேபியா வரவேற்றுள்ளது என்று சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சக அறிக்கையை மேற்கோள் காட்டி சவுதி செய்தி நிறுவனம் (SPA) செவ்வாய்கிழமை அதிகாலை செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்காவிலும் மற்றும் சவுதி அரேபியாவிலும் கொடூரமான பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்திய பயங்கரவாதத்தின் தலைவர்களில் ஒருவராக அல்-ஜவாஹிரி கருதப்படுகிறார். அந்த பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சவுதி குடிமக்கள் உட்பட பல்வேறு தேசங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து அப்பாவி மக்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சவுதி அரேபியா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.