Ads Area

மாதாந்த உதவித்தொகை சமுர்த்தி வங்கி ஊடாக வழங்கும் அங்குராப்பன நிகழ்வு.


 நூருல் ஹுதா உமர்

முதியோர், வலது குறைந்த நிலையில் உள்ளோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மாதாந்தம் வழங்கப்படும் நிதியுதவிக் கொடுப்பனவுகளை செப்டம்பர் மாதம் தொடக்கம் சமுர்த்தி வங்கியின் சேமிப்புக்கணக்கின்  ஊடாக வழங்கும் அங்குராப்பன நிகழ்வு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யு.ஜூனைதா, சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ. பஸ்மியா, சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எப் .சியாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் 2000/= முதியோர் கொடுப்பனவு  637  நபர்களுக்கும்,
5000/=  வலது குறைந்தோர் கொடுப்பனவு 193 நபர் களுக்கும், 5000/= சிறுநீரக நோயாளிக்கான உதவி  கொடுப்பனவு  32  நபர்களுக்கும் சமுர்த்தி வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe