Ads Area

நேட்டோ - ரஷ்யப் படையினருக்கிடையில் மோதல்...!

 


நேட்டோ படையினருக்கும்  ரஷ்யப் படையினருக்குமிடையே நேரடி மோதலொன்று இடம்பெறும் பட்சத்தில் அது உலகப் பேரழிவொன்றுக்கு  வழிவகை செய்யம் என ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு நாடுகளின் கூட்டம் வெள்ளிக்கிழமை (14) கஸகஸ்தான் நகரான  அஸ்டானாவில் இடம்பெற்ற போது அந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது உக்ரேனில் இடம்பெற்று வரும் போரில் பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கான அவசியம் இருப்பதாகத் தான் கருதவில்லை என அவர் கூறினார்.

அண்மையில தன்னால் உத்தரவிடப்பட்டுள்ள இராணுவத்திற்கு ஆட்களை திரட்டுவதற்கான நடவடிக்கை முடிவொன்றுக்கு வந்துள்ளதாகவும் அது நிறைவடைந்துள்ள போது மேலும்  படையணிக்கு ஆட்களைச் சேர்க்கும் திட்டம் தனக்குக் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

300,000 பேரை படைக்குச் சேர்க்கும் தன இலக்கு  எட்டப்படும் நிலையிலுள்ளதாகவும்  உக்டீரனை அழிக்கும் திட்டம் தனக்குக்  கிடையாது எனவும் அவர் கூறினார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe