சம்மாந்துறை அன்வர் பள்ளிவாசலில் அமைந்துள்ள ஜம்இய்யதுல் உலமா அலுவலகத்துக்கான மின்பிறப்பாக்கி (Generator) சமூக செயற்பாட்டளர், விஞ்ஞான முதுமானி அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டின் பிரகாரம் OCD அமைப்பினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார தடை காரணமாக ஜம்இய்யதுல் உலமா சபையினர் OCD அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கினங்க அசௌகரியங்களை நிவர்த்திக்கும் முகமாக மின்பிறப்பாக்கி வழங்கிவைக்கப்பட்டது.
இதனை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் எம்.வை. ஜலீல் மௌலவியிடம் கடந்த சனியன்று ஜம்இய்யதுல் உலமா கட்டிட தொகுதியில் வைத்து OCD அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், விஞ்ஞானி முதுமானியுமான அஸ்மி யாசீன் வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அந் நிகழ்வில் உரையாற்றிய அஸ்மி யாசீன் கூறியதாவது,
ஊரின் முகவெற்றிலையில் அமைந்துள்ள மார்க்க விடயங்களுக்கான அலுவலகம் என்றும் பிரகாசிக்க வேண்டும்; அது இருள் சூழ்ந்திருப்பது முழு ஊரும் இருளில் இருப்பதற்கு ஒப்பாகிவிடும். அந்த அடிப்படையிலே இவ்வாறான தேவையுடைய பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.
மேலும், சம்மாந்துறையில் உருவாகின்ற உலமாக்கள் ஒவ்வொருவரும் பட்டதாரியாக வரவேண்டும். அதற்கு ஏற்றாற்போல் எமது மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களும் அமையப்பெற வேண்டும். இது எமது உலமாக்கள் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களுக்கு இலகுவானதாக இருக்கும்.
அவ்வாறில்லாமல் எமது உலமாக்கள் திடமற்ற தொழில்களில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஈடுபடுவதானது எமக்கு மனவருத்தத்தையளிக்கிறது.
எனவே, இதனை நிவர்த்திசெய்ய OCD அமைப்பு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தினை மாற்றுதில் பங்களிப்பு செய்ய தயாராக இருக்கின்றது.
அத்தோடு, இன்ஷா அல்லாஹ் மேலும் பல சேவைகளை இனிவரும் காலங்களில் எமது அமைப்பினால் செயற்படுத்தவும் உள்ளாம்' - என்றார்.
இந் நிகழ்வுக்கு உலமாக்கள், புத்திஜீவிகள், OCD அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.