"கத்தாரில் நடக்கவிருக்கும் உலக கோப்பை போட்டியைக் காண உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் காண வருவார்கள் என்பதால் அதிகளவு பயணிகளின் வருகையைக் கையாள்வதற்காகவும் தொற்றுநோய்க்குப் பிந்தைய விமான நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் ஏற்ப கத்தார் ஏர்வேஸ் தனது ஊழியர்களை 10,000 உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கத்தார் தலைநகரமான தோஹாவை மையமாக கொண்டு இயங்கும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை தற்போது 45,000 இலிருந்து 55,000 க்கும் அதிகமாக உயர்த்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.