Ads Area

அமீரகத்தில் இன்று நிலவும் மூடுபனி..!

 


அமீரகத்தில் இன்றைய நாள் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று காலை 9 மணி வரை சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் சில சமயங்களில் கிடைமட்ட தெரிவுநிலை (visibility) குறைந்து மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 


இதன் காரணமாக அமீரகத்தின் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிகையும் சில இடங்களில் சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபியில் அதகபட்சமாக 38ºC ஆகவும், துபாயில் அதிகபட்சமாக 37ºC ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபுதாபி மற்றும் துபாயில் ஈரப்பதம் அளவு 25 முதல் 90 சதவீதம் வரை இருக்கும் மற்றும் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe