சம்மாந்துறை பிரதேசத்தில் ஏறக்குறைய 26,500 ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருக்கின்றது. இவ்விவசாயச் செய்கை தொடர்பாக சம்மாந்துறை மற்றும் மல்வத்தை கமநல சேவைப் பிரிவுகளுக்குட்பட்ட 52 விவசாயக் குழுக்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலகத்தினால் நம்பிக்கையாளர் சபை மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி அம்பாரை மாவட்ட செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட விலைப் பட்டியலுக்கமையவும், அயல் கிராமங்களில் நடைபெறும் கட்டணங்களுக்கு ஏற்பவும் கலந்துரையாடல் செய்து பின்வருமாறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
- உழவு வேலைக்கு ஒரு ஏக்கருக்கு (உழவு, அரவு, விதைப்பு) – ரூ 15,000.00
- றொட்டடித்தல் ஏக்கருக்கு – ரூ 6,000.00
- பல்லுக் கலப்பை அடித்தல் ஏக்கருக்கு (முளை ஏற்றிச் செல்வது உட்பட) – ரூ 2000.00
- விதைப்பு ஆட் கூலி ஒருவருக்கு – ரூ 2000.00
- முளை எறிவதற்கு ஏக்கருக்கு ரூ 800.00
- வரம்பு கொத்துதல் அல்லது கட்டுவதற்கு ரூ. 2500.00
- புல் பிடுங்குவதற்காக ஒரு கூலியாளுக்கு – ரூ. 2000.00
- அறுவடை செய்வதற்கு ஏக்கருக்கு – ரூ 13,000.00
- அறுவடை செய்த நெல்லை வீதிக்கு இழுப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 3000.00
- நெல் காயவைத்துக் கட்டுதல் (1 மூடைக்கு) – ரூ. 175.00
- ஈரநெல் கட்டுதல் ஒரு மூடை – ரூ.140.00
- நெல் விற்பனையின் போது 1 வெற்று பேக்குக்கு வியாபாரியிடமிருந்து அறவிடவேண்டியது – ரூ.100.00
- நெல் ஏற்றுதல் பட்டம்பிட்டி, மோறாவில் மற்றும் புளக் ஜே பகுதிகளுக்கு ஒரு மெசின் பெட்டிக்கு (தூரத்தைப் பொறுத்து) – ரூ. 4000 தொடக்கம் 7000வயை
- நெல் ஏற்றுதல் பட்டம்பிட்டி, மோறாவில், மற்றும் புளக் ஜே பகுதிகளுக்கு ஒரு லொறிக்கு (தூரத்தைப் பொறுத்து) – ரூ.5000 – 8000 வரை
எனவே, மேற்படி தீர்மானங்களை நடைமுறைப்படுத்த சகல தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்கின்றோம்.
நம்பிக்கையாளர் சபை,
இஸ்லாமிய செயலகம்,
பெரிய பள்ளிவாசல், சம்மாந்துறை.