Ads Area

தேசிய மரநடுகை திட்டத்தின் பயன்தரு மரங்கள் நட்டி அங்குரார்ப்பணம் செய்து வைப்பு !

 நூருல் ஹுதா உமர்


நாட்டின் வனவளத்தையும் சுற்றுச்சூழல் பசுமையை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்படு வருகின்றது. இந்த நிகழ்வில், பாடசாலை சூழலை பசுமை நிறைந்த சூழலாக மாற்றுவதற்காக பாடசாலையில் பயன்தரக்கூடிய கஜூ மரக்கன்றுகள் இறக்காமம் அல்-மதீனா வித்தியாலயத்தில் நடப்பட்டன.

இறக்காமம் ஆயுர்வேத வைத்தியசாலை சமுதாய மருத்துவ உத்தியோகத்தர் டாக்டர் கே.எல்.எம். நக்பர்  ஏற்பாட்டிலும், அல்-மதீனா வித்தியால அதிபர் எம்.ஐ. ஜௌபர் அவர்களின் ஒருங்கினைப்பிலும் இம் மரநடுகை நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு, பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் கலந்து கொண்டதுடன் பாடசாலை வளாகத்தில் சூழலுக்கும் மாணவர்களுக்கும்  பயன்தரக்கூடிய கஜூ மரக்கன்றுகளை நட்டிவைத்தார். சுற்றுச்சூழலுக்கேற்ற பசுமையான சூழலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு திட்டத்தினை மையப்படுத்தி இம் மர நடுகை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மேலும், இம் மர நடுகை நிகழ்விற்கு, கௌரவ அதிதியாக இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜமீல் காரியப்பர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் சிறப்பு விருந்தினராகவும், இம் மரநடுகை நிகழ்வில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டிவைத்தனர்.

மேலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார் உட்பட சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சி.எம். தஸ்லிம், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜமீல், சிரேஷ்ட அபிவித்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe