விசா காலத்தை விட அதிகமாக தங்க வேண்டாம், வெளிநாட்டு பயணிகளுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. உம்ரா அல்லது புனிதப் பயணம் மேற்கொள்ள வரும் வெளிநாட்டு பயணிகள் விசா காலாவதியாகும் முன் நாட்டை விட்டு வெளியேறுவதை உறுதிசெய்ய சவுதி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், விசா காலாவதியான பிறகு தங்குவது சவுதி அரேபியாவின் சட்டங்களை மீறுவதாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளது. அமைச்சகம் சமீபத்தில் உம்ரா விசா காலத்தை 30 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இந்த நாட்களில் அவர்கள் சவூதி அரேபியா முழுவதும் சுதந்திரமாக செல்ல அனுமதி உண்டு என்றும் அறிவித்தது.
உம்றா விசாவில் வரும் பயணிகள் எந்த சவூதி விமான நிலையத்திற்கும் வந்து செல்லலாம் என்றும், நுசுக் செயலியில் பதிவு செய்து உம்ரா அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.