Ads Area

உம்ரா விசாவிற்கான செல்லுபடி காலத்தை நீட்டித்த சவூதி..!

 சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உம்ரா விசாவிற்கான செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்பு 30 நாட்களாக இருந்த உம்ரா விசாவை தற்பொழுது 90 நாட்கள் வரை நீட்டித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் உம்ரா மேற்கொள்ளவிருக்கும் வழிபாட்டாளர்கள் 90 நாட்களுக்கு இனி நாட்டில் தங்கிக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டாளர்கள் நாடு முழுவதும் பயணிக்க மற்றொரு சுற்றுலா விசா எடுக்க தேவையில்லை என்றும் அவர்கள் தங்கியிருக்கும் போது ரயில், பேருந்து அல்லது கார் மூலம் மக்கா, மதீனா அல்லது நாட்டின் வேறு எந்த நகரத்திற்கும் இடையே எளிதாக செல்ல முடியும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவர்கள் சவூதியில் தங்கியிருக்கும் போது எந்த உள்ளூர் அல்லது சர்வதேச விமான நிலையத்தின் வழியாகவும் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. வழிபாட்டாளர்கள் விசா விதிமுறைகளை மீறுவதைத் தவிர்ப்பதற்காக தங்கள் உம்ராவை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்துவிட்டு, விசா காலாவதியாகும் தேதிக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் உம்ரா செய்யவிருக்கும் நபர்கள் உம்ரா அனுமதிகளுக்காக (umrah permit) Nusuk அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் இருந்து சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் வழிபாட்டாளர்களின் பயணங்களுக்கான ஒரு ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாக Nusuk உள்ளது குறிப்பிடத்தக்கது.

thanks for website-khaleejtamil


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe