ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது நவம்பர் 2022 ஆம் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை எரிபொருள் விலையானது தற்பொழுது அதிகரித்துள்ளது.
எரிபொருள் குழுவின் நவம்பர் மாத விலைப்பட்டியலின் படி, நவம்பர் 1 ஆம் தேதி முதல், Super 98 வகை பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.32 திர்ஹம்சாக அதிகரித்துள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை அக்டோபர் மாதத்தில் 3.03 திர்ஹம்சாக இருந்தது.
அடுத்ததாக ஸ்பெஷல் 95 வகையை சார்ந்த பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு 3.20 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பெட்ரோலின் விலை அக்டோபர் மாதம் 2.92 திர்ஹம்சாக இருந்தது.
மூன்றாவது வகை பெட்ரோலான இ-பிளஸ் 91 பெட்ரோல் விலையானது தற்போது ஒரு லிட்டருக்கு 3.13 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2.85 திர்ஹம்சாக அக்டோபர் மாதத்தில் இருந்தது.
அதே சமயம் அக்டோபர் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 3.76 திர்ஹம்சாக இருந்து வந்த டீசல் விலையானது நவம்பர் மாத விலை பட்டியலில் 4.01 திர்ஹம்சாக அதிகரிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
thanks for website-khaleejtamil