குவைத்தில் வெளிநாட்டினரின் டிரைவிங் லைசென்ஸ் மதிப்பீடு சைய்யப்பட்டு சட்ட விரோதமாக பெறப்பட்ட வெளிநாட்டினரின் டிரைவிங் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதன்கீழ் தற்பொழுது 10,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீடானது இந்த வருட இறுதி வரை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய ஒரு அறிக்கையில் அமைச்சகத்தின் விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், பொதுப் போக்குவரத்துத் துறையின் தரவுத்தளத்தில் இருந்து அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஒரு நபரின் வேலை மாற்றங்கள், குறைந்த பட்த சம்பள தகுதியான 600 குவைத் தினார் இல்லாமல் இருந்தல் போன்ற காரணங்களால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.