Ads Area

ஈரானில் வலுக்கும் போராட்டம்.! ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள்.


 ஹிஜாபிற்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஈரான் அரசு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை ஈரானில் ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த வன்முறை சம்பவத்தில் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் புலனாய்வுப் பிரிவின் தளபதி அலி மௌசவி உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மாகாண ஆளுநர் ஹொசைன் மொடரேஸ் கியாபானி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று ஈரானில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்களைச் சேர்ந்த சில போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை என்ற போர்வையில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், காவல் நிலையத்தின் மீது கற்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை வீசியதாகவும் ஹொசைன் மோடரேஸ் கியாபானி கூறினார். காவல் நிலையத்தைக் கைப்பற்ற துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

மாகாண தலைநகர் சஹேதானில், நடந்த இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும், போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்ததாகவும் கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் செயின் ஸ்டோர்கள், கடைகள் உட்பட பொது சொத்துக்களுக்கு தீ வைத்தனர். வங்கிகள் மற்றும் அரசாங்க மையங்களையும் சூறையாடினர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe