Ads Area

சம்மாந்துறையில் சமாதான தகவல் மையம் திறந்து வைக்கப்பட்டது.

 கப்சோ [GAFSO] நிறுவனத்தின் மற்றுமோர் செயற்த்திட்டமாக அம்பாரையில் வாழும் பல்லின சமூகங்களுக்கு பயன்தரும் வகையிலும், மாவட்டத்தில் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தினை அதிகரிக்கும் வகையிலும் சமாதான தகவல் மையமொன்றினை நேற்று  [2022.10.29] ம் திகதி சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது நிலையத்தின் பெயர் பலகையினை அதன் ஸ்தாபக தலைவர் ஜனாப். ஐ. அப்துல் ஜப்பாரினால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதனோடு இணைத்து ஜனாப் இர்பான் ஹாபிஸ். மற்றும் சிறப்பு அதிதிகளாக கலாநிதி அஸ்லம் சஜா , ஆசிய நிலைய உத்தியோகத்தர் ஜனாப் ஜவாஹிர் , USAID உத்தியோகத்தர் ஜனாப். நௌஷாத் , பிரமுகர்களான ஜனாப். முஸ்தபா , எழுத்தாளர் செசிலியா மற்றும் கப்சோ நிறுவன திட்டப்பணிப்பாளர் ஜனாப். காமில் இம்டாட் அதன் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe