துருக்கி - இஸ்தான்பூலில் பொதுவெளியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்தான்பூல் நகரின் பரபரப்பான நடைபாதையில், மாலை 4.20 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டுவெடிப்பு
அத்துடன் 53 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துருக்கி அதிபர் எர்டோகன், இது கொடூரமான தாக்குதல் என்றும், இதற்கு காரணமானவர்களை தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.