உலக வங்கியின் கடனுதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு யூரியா இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மலேசிய நாட்டில் இருந்து 22000 மெற்றிக்தொன் யூரியா இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தக் கடன் திட்டத்தின் இரண்டாவது கட்ட தொகுதி நாளை நாட்டிற்கு கிடைக்கபெறவுள்ளது.
இதன் முதலாவது தொகுதி சீன நாட்டில் இருந்து 13000 மெற்றிக்தொன் யூரியா கிடைக்கப்பெற்றிருந்தது. தற்போது கிடைக்கப்பெறும் இரண்டாவது தொகுதி பசளையினை நாட்டில் காணப்படும் 566 கமநல பிரிவுகள் மூலம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது .