Ads Area

வரவு செலவுத் திட்ட உரை-முழு விபரம் இணைப்பு.

 21 ஆம் நூற்றாண்டின் நவீன உலகிற்கு ஏற்ற புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணி 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளின் ஊடாக ஆரம்பிக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


புதிய வரவு - செலவுத் திட்டத்தில் தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலை உட்பட பல பிரதேசங்களிலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சுற்றுலாத்துறையை இலக்காக கொண்டு புதிய பொருளாதார வலயங்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


இலங்கையின் நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அதிபர், இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மூலதனச் சந்தை மற்றும் ஏற்றுமதி சந்தை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும், உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த வருடம் முதல் 2032 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் புதிய ஏற்றுமதிகள் ஊடாக இலங்கையின் வருடாந்த வருமானத்தை 3 பில்லியன் டொலர்களால் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் நிமிர்த்தம் மட்டுப்படுத்தப்படவில்லை எனவும் நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு புதிய கடல்சார் சுற்றுலா மேம்பாட்டு வலயங்கள் உருவாக்கப்படும் எனவும் அதிபர் தனது வரவு - செலவுத் திட்ட உரையில் கூறியுள்ளார்.


வரவு - செலவுத் திட்ட முழுமையான உரை

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செ... by Ramesh RK



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe