Ads Area

ஜனாதிபதி ரணிலுடன் ஹக்கீம் - மனோ இன்று நேரில் சந்தித்துப் பேச்சு.

 தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

காலை 9.30 மணிக்குப் பல்வேறு விடயங்களையொட்டி இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.


இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் குறித்து ஹக்கீம் நிச்சயம் ஜனாதிபதியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போது வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடைந்திருக்கும் சீற்றம் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்குக் மனோ கணேசன் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அச்சமயம், சமாதானப் பேச்சுகளுக்கு உகந்த சூழல் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில், சகல தரப்புகளுக்கும் இணக்கமான ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராகத் தாமதமின்றி நியமிக்க வேண்டிய கட்டாயத்தை மனோ கணேசன் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பார் எனத் தெரிகின்றது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe