நூருல் ஹுதா உமர்
இலங்கை தேசிய கண் வைத்தியசாலை மருத்துவ குழுவினால் ஒக்டோபர் 31 சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் கண் வில்லை (லென்ஸ்) வைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட 135 பேரில், 50 பேருக்கான இலவச லென்ஸ் வைக்கும் சத்திர சிகிச்சை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து பிராந்திய பணிப்பாளர் டொக்டர். ஐ.எல்.எம்.றிபாஸின் அயராத முயற்சியின் பலனாக ஷபாப் பௌன்டேசன் அனுசரனையில் இச்சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளது.
மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர்.ஏ.எல்.எம்.அஜ்வத்தின் தலைமையில், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திர சிகிச்சை பயனாளிகளுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் நிகழ்வில் பிராந்திய பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், வைத்திய அதிகாரி சனுஸ் காரியப்பர், பிராந்திய ஆயுள்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், தாதிய பரிபாலகர் பி.எம்.நஸ்றுதீன், வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.ஐ.எம்.சதாத் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இச்சத்திர சிகிச்சைக்குச் செல்வதற்கான இலவச போக்குவரத்து ஏற்பாடுகளை வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.