Ads Area

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரபல சட்ட மேதை பாயிஸ் முஸ்தபா நியமனம்.

 நூருல் ஹுதா உமர்


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக  பிரபல சட்ட மேதை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்னர் தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் அவர்களும் பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வேந்தராக இவர் செயற்படும் விதத்தில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe