டெங்கு விழிப்புணர்வும் – சிரமதான நிகழ்வும் 2022
பருவ கால மழை ஆரம்பித்துள்ளதன் காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன இதனை தடுக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியவற்றின் பங்களிப்புடன் எதிர்வரும் 2022.11.03ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை ) 8 மணி முதல் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் கோயில் வரையான தமிழ் பிரிவு – 01, 02, 04, சம்மாந்துறை – 05, 06, 08, 10 மற்றும் வீரமுனை -01 02 ஆகிய கிராம சேவை பிரிவுகளில் விழிப்புணர்வுடன் கூடிய சிரமதான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாளில் உங்களது வீடுகளை நோக்கி வருகின்ற உத்தியோகத்தர்களுக்கு பரிபூரணமான ஒத்துழைப்பினை நல்குமாறும் உங்களது வீடுகள் மற்றும் அயல் சூழவில் காணப்படக்கூடிய நுளம்பு பெருகக்கூடிய இடங்களில் பாவனையில் இருந்து அகற்றப்பட்ட தகர பேணிகள், சுரட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் இதர பொருட்களை முன்கூட்டியே சேகரித்து உங்களது வீடுகளுக்கு முன்பாக வருகின்ற கழிவகற்றும் வாகனங்களில் ஒப்படைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
குறிப்பு : தங்களது வீடுகள் மற்றும் அயல் சூழலில் நுளம்பு பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்படும் இடத்து தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மன வருத்தத்துடன் அறிய தருகின்றேன்
பிரதேச செயலாளர். பிரதேச செயலகம்,
சம்மாந்துறை.
TP: 067 2260236
Fax: 067 2261124
Email: sanmanthuraids@gmail.com