Ads Area

மக்காவுக்கு புனித பயணம் செய்த யுவன் ஷங்கர் ராஜா..

 இசைஞானி இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருக்கு முதல் வெற்றிப்படமாக அமைந்தது அஜித் முருகதாஸ் கூட்டணியில் உருவான ’தீனா’ திரைப்படம்.  அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றியுள்ள யுவன் ஷங்கர் ராஜா  இதுவரை 150 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு இசையமைப்பாளரான அறிமுகம் ஆன யுவன், இந்த 25 ஆண்டுகளில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுபோல செல்வராகவன், வெங்கட்பிரபு, அமீர், ஏ ஆர் முருகதாஸ், ராம், ஹரி என முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இதுவரை 150+ படங்களில் பணியாற்றியுள்ள யுவன், ரசிகர்களைக் கவர்ந்த பல பாடல்களைக் கொடுத்துள்ளார். 

யுவன் தனது இசையில் மெலடி, சோகப்பாடல்கள், குத்துப்பாடல்கள் என எல்லா வகையிலும் ஹிட்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக யுவனின் பின்னணி இசையமைப்புகளும் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தவை.

யுவன் ஷங்கர் ராஜா, சமீபத்தில் (31.08.2022) தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்த நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். சமீபத்தில்  யுவனுக்கு சத்யபாமா பல்க்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மசூதிக்கு உம்ரா புனித பயணம் சென்றுள்ளார். யுவன், இஹ்ராம் அணிந்து கொண்டு உம்ரா புனித பயணம் செய்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றன.

கொரோனா காரணமாக தடைப்பட்ட உம்ரா புனித பயணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் துவங்கியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணிகள் மெக்காவுக்கு வருகை தருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe