Ads Area

அமீரகத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் - உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம்..!

 ஈரானின் தெற்குப் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கமானது ஐக்கிய அரபு அமீரகத்திலும் லேசாக உணரப்பட்டது என அமீரகவாசிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், 5.3 ரிக்டர் அளவில் ஈரானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அமீரகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) உறுதிப்படுத்தியுள்ளது.


வியாழக்கிழமை மாலை 5.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. பல குடியிருப்பாளர்கள் அமீரகத்தில் நில அதிர்வினை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானில் ஏற்பட்ட பல நிலநடுக்கங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் உணரப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம் ஒரு வருடத்தில் பல முறை சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது. இருந்தபோதிலும் அவை பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று NCM அதிகாரி ஒருவர் முன்னதாக கூறியிருந்தார்.


NCM இன் அதிகாரியான அல் ஷம்ஸி, முன்பு நில நடுக்கம் எவ்வாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை விளக்கினார். அவர் கூறுகையில், “இந்த அதிர்வுகள் எப்போதுமே மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால் அவை போதுமான வலிமையுடன் இருந்தால் சில சமயங்களில் உணரப்படலாம்” என்று தெரிவித்திருந்தார்.


மேலும், “ஐக்கிய அரபு அமீரகம் அவ்வப்போது சிறிய நிலநடுக்கங்களை அனுபவிக்கிறது, ஆனால் அவை தேசத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, கவலைப்பட ஒன்றுமில்லை.” என்றும் கூறியிருந்தார்.

thanks-khaleejtamil



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe