Ads Area

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு..!

 பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.


அரசியல் பேரணியொன்றில் கலந்துகொண்டபோது இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.


வஸீராபாத் நகரில்  இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது.


இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும் ஆனால், அவர் ஸ்திரமான நிலையில் உள்ளார் எனவும் அவரின் உதவியாளர் ரபூப் ஹசன் தெரிவித்துள்ளார்


இது இம்ரான் கானை கொல்வதற்கான ஒரு படுகொலை முயற்சி எனவும் ரவூப் ஹசன் கூறினார்

காயமடைந்த இம்ரான் கான்


பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராக, லாகூரிலிருந்து தலைநகர் இஸ்லாமாபத் வரையான நீண்ட அணிவகுப்பு எனும் அரசியல் பேரணியை இம்ரான் கானின் பிரிஐ கட்சி நடத்தி வருகிறது இப்பேரணியின்போதே வஸீராபாத்  நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பிரிஐ கட்சியின் பிரமுகர்களான பைசல் ஜாவித், அஹ்மெத் சட்டா ஆகியோரும் இச்சம்பவத்தில் காயமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இம்ரான் கான் கொள்கலன் வாகனத்தின் மீது நபர் ஒருவர் தன்னியகத் துப்பாக்கியினால் சுட்டுள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்த பிரிஐ பிரமுகர் பைசால்  ஜாவித்

இம்ரான் கான் மீது 3, 4 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பிரிஐ கட்சியின் பிரமுகர் இம்ரான் இஸ்மாயில் தெரிவித்துளளார்.


காயமடைந்த இம்ரான் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொள்கலன் வாகனத்திலிருந்து இறங்கும்போது ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe