Ads Area

கபடி போட்டியின் தேசிய சாதணையாளர்களை வாழ்த்தி கௌரவிப்பு.

 (நூருல் ஹூதா உமர்


 நிந்தவூர்  பிரதேசத்தின் கபடி வீரர்கள் தேசிய, சர்வதேச ரீதியில் கபடி போட்டிகளில் தொடர்ச்சியாக  தங்களது திறமையினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நிந்தவூரின் கபடி வீரர்களை வாழ்த்தி கௌரவிக்கின்ற நிகழ்வு  Realx garden வளாகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாரை மாவட்ட அமைப்பாளரும், shine Lanka and Trans Overseas Consultants (Pvt) Ltd Colombo தவிசாளருமான ஏ.எல்.சஹீல், தேசிய காங்கிரஸின் நிந்தவூர் அமைப்பாளர் எம்.எம்.முனீர்,பேஷன் களரி இன் பிரதானி யாஹூப் பஹாத், கமு/கமு/அல்- மதினா வித்தியாலய அதிபர் நிஹார்தீன், கமு/கமு/அல்- மதினா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் முஹம்மட் ரபீக், Realx garden நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.பி. ஜமால், சதாம் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரசீன், ஆசிரியர் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இஸ்மத் மற்றும் மதினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல்.அன்சார் ஆசிரியர் , ஆசிரியர் அனஸ் அஹமட் மற்றும் இன்னும் பல முக்கிய அதிதிகளும் கலந்து கொண்டனர்

மேலும் இந் நிகழ்வில் கபடி துறையின் வீரர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, நிந்தவூரின் கபடி துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து பல வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்து விளங்க காரணமாய் அமைந்தவர்களை கௌரவித்து அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

Slideshow

1 / 3
2 / 3
3 / 3

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe